Welcome to Jettamil

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Share

அம்பலாங்கொட – பலபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் கடந்த 3 மாதங்களில் 29 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கரவண்டியில் வந்த சிலர் T-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக அம்பலாங்கொடை – தெல்துவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஹோட்டலுக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். கடந்த 05 வாரங்களுக்குள் அம்பலாங்கொட பிரதேசத்தில் மாத்திரம் 05 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு – வெல்லவீதிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 09 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 03 மாதங்களில் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை