எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் உர விநியோகம் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப் பருவத்தில் பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்களையும் அறுவடை செய்வதற்கு தேவையான நீர் கொள்ளளவு போதுமானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.