ஒக்டோபர் முதல் அமர்வு வாரத்தின் மூன்றாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது. இதற்காக நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இன்று, துறைமுக அதிகாரசபை திருத்தம் சட்டமூலம், சிவில் விமான போக்குவரத்து திருத்தம் சட்டமூலம், சிவில் விமான போக்குவரத்து சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள், குறித்து விவாதம் இடமபெறவுள்ளது.
மேலும் கப்பல் முகவர்கள், சரக்கு அனுப்புவோர், கப்பல் அல்லாத பொது கேரியர்கள் மற்றும் கொள்கலன் நடத்துநர்கள் சட்டத்தின் கீழ் விதிமுறைகள் குறித்தும் இன்று விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.





