வீதியில் போடப்பட்ட கற்களால் ஆபத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொள்ளும் மக்கள்!
மானிப்பாய் பட்டின சபை வீதி நேற்று இரவு இவ்வாறு காணப்பட்டது. வீதி புனரமைப்புக்காக நேற்று வீதியில் போடப்பட்ட கற்களினால் வீதியால் செல்வோர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
வீதி விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு
வீதியில் போடப்பட்ட கற்கள் ஒழுங்குமுறையில் போடுப்படாமை, வீதி வேலைகள் இடம்பெறுவதற்கான போக்குவரத்து குறியீடுகள் வீதியில் இடம்பெறாமை போன்ற காரணங்களினால் வீதி விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையி அபிவிருத்தி நடவடிக்கைகளினை முன்னெடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.