மனிதர்களின் அன்றாட வீண் விரய செலவினங்களை தவிர்க்க வேண்டும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
76 ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்று நோய் எற்பட்டிருந்தது. அதில் பல உயிரிழப்புக்களும், மனிதர்களின் மனங்களிலும் கஷ்ட சூழ் நிலை காணப்பட்டது. மேலும் பொருளாதார நெருக்கடியும் எற்பட்டிருந்தது. எனவே இதனை கடந்தா வந்த எமது அரசாங்கம் புதிய உத்திகளுடனான திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தினை மேன்படுத்துவதிலும், உணவு உற்பத்தியிலும் ,ஏற்றுமதி விவசயத்திலும் முன்னேற்றம் காணவேண்டியதாக இருக்கின்றது. பாரம்பரிய சிறுதானிய உற்பத்தியிலும் உள்ளூர் உணவுப் பொருட்கள்மேன்படுத்தவேண்டும்.ஏற்றுமதியில் நவீன மாயக்கும் சிந்தனையாளர்களாக வளர்க்கவேண்டும்.
எனவே எமது நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தில் இருந்து 77 ஆவது சுதந்திர தினத்திலாவது இவ் திட்டங்கள் அனைத்தும் கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்படவேண்டும். அதுவே இலக்கு அதன் ஊடாக ஒரு சுபீட்சமான வாழ்க்கையினை காணமுடியும் என்றார்.