வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக QR குறியீட்டு முறைமையின்றி பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது இன்று (11.04.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணியாளர் மயூர நெத்திகுமார உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு ஆரம்பமாகும் இந்த விசேட சலுகையானது, எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
இருப்பினும், இந்தக் காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வாகன இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கத்திற்கு அமைவான ‘ஒற்றை மற்றும் இரட்டை’ (Odd/Even) நடைமுறை கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





