Welcome to Jettamil

புத்தாண்டு விடுமுறையில் வீடு செல்லவிருப்போருக்காக விசேட புகையிரத சேவைகள்

Share

புத்தாண்டு விடுமுறையில் வீடு செல்லவிருப்போருக்காக விசேட புகையிரத சேவைகள்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரைக்கும், காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், தெற்கு நோக்கிய பயணங்களுக்காக மருதானைக்கும் மாத்தறை மற்றும் பெலியத்தவிற்கும் இடையில் ஏப்ரல் 10, 11, 12, 15 மற்றும் 18 ஆகிய திகதிகளில் கூடுதல் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, பெலியத்தவிற்கும் மஹாவவிற்கும் இடையில் இயக்கப்பட்ட ‘ரஜரட்ட ரெஜின’ புகையிரதம், இன்று முதல் (ஏப்ரல் 09) தினசரி அனுராதபுரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொழும்பு கோட்டையிலிருந்து மஹாவ வரை செல்லும் அலுவலக புகையிரதமும், புத்தாண்டு விடுமுறை தினங்களில் அனுராதபுரம் வரை நீடிக்கப்பட்டு மேலதிக சேவைகள் வழங்கப்படவுள்ளன.

பயணிகளுக்குச் சுகமான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்த விசேட புகையிரதங்களில் சிலவற்றில் முதல் வகுப்பு (First Class) முன்பதிவு இருக்கைப் பெட்டிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

புகையிரத நேர அட்டவணைகள் மற்றும் மேலதிக விபரங்களை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை