Welcome to Jettamil

பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம், அரச சேவைகள் ஆணைக்குழு அறிவிப்பு

Share

பயிலுனர் பட்டதாரிகள் டிப்ளோதாரிகளுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதுடன், நியமனத் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழு கடந்த 28 ஆம் திகதி இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள், டிப்ளமோதாரிகள், தொழிலுக்கு அமர்த்தல் – 2020 இன் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள், டிப்ளமாதாரிகள், நிரந்தர அடிப்படையில் அரசு சேவைக்கு, மாகாண அரச சேவைக்கு நியமித்தல்

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் உங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய உங்களின் திணைக்களத்தில் அல்லது நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 2022.01.03 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வண்ணம் நிரந்தர நியமனம் கிடைக்கும் நியமானதாரிகளின் பெயர்ப்பட்டியலை இத்துடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

அந்த நியமனதாரிகளுக்காக நிரந்தர நியமனம் வழங்குவது வடமத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, அந்த நியமனம் பெறுநர்களை அந்த சந்தர்ப்பத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

திகதி – 2022.01.05
இடம் – முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையம்
நேரம் – முற்பகல் 10.00 மணி

என்.எஸ். எட்டிஆராய்ச்சி
உதவி செயலாளர்
செயலாளர் சார்பாக
மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு
வடமத்திய மாகாணம்.

பிரதிகள்
பிரதம செயலாளர் – வடமத்திய மாகாணம்
ஆளுநர் செயலாளர் – வடமத்திய மாகாணம்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை