யாழில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்று வருகிறது.
இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்து வருகின்றதாக அறியமுடிகின்றது.
போராட்டம் காரணமாக யாழ் நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் அதனை சீர் செய்வதற்காக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.