வட்டுக்கோட்டைப் பொலிசாரின் சட்ட விரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றமிழைத்த பொலீசார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம் – என குறிப்பிட்டுள்ளார்.