Welcome to Jettamil

நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் அரசினால் ஆரம்பிக்கப்பட்டது

Share

நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊட உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் அரசினால் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று ஆரம்பமானது.

தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளர்த்தவும், அமைபுக்களுடன் இணைத்ததான மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்மப நிகழ்வு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் கெ.சங்கீதன் தலைமையில் ஆரம்பமானது.

புதுமுறிப்பு நன்னீர மீன் உற்பத்தி பண்ணையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் இத்திட்டத்திற்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம் நிகழ்வான இன்று 2 லட்சம் மீன் குஞ்சுகள் 5 தொட்டிகளில் விடப்பட்டுள்ளதுடன், ஏனைய 25 தொட்டிகளிலும் வைப்பிட நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை