Welcome to Jettamil

கைதியை பிடிக்க ஆற்றில் பாய்ந்த பொலிஸ் உயிரிழப்பு

Share

ஜா-எல பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் ஜா-எல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல தயாரான போது குறித்த சந்தேக நபர் ஆற்றில் பார்த்துள்ளார். இதன் போது அவரை கைது செய்வதற்காக ஆற்றில் பாய்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 26 வயதுடைய சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தராவார். இந்நிலையில், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் மீண்டும் ஜா -எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை