கொழும்பில் ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், காயமடைந்த 10 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு மீரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வதிவிட்டத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கோட்டா வீட்டுக்குப் போ என முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க சிறப்பு அதிரடிப்படையினர் , கலகம் அடக்கும் காவல்துறையினர், பொதுமக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளையும், நீர் தாரை பிரயோகத்தையும், குண்டாந்தடி பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.
இந்த மோதல்களை படம்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 10 பேர், இந்த சம்பவங்களில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும், நான்கு பேர், கொழும்பு தெற்கு களுபோவில போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த அனைவரும் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றன.