கொழும்பு மீரிஹான பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களால், இராணுவத்தினர், பொலிசாரின் வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இராணுவத்தினரின் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவுக்கு முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இதனால் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியது. அதேவேளை இராணுவத்தினரின் மற்றொரு ஜீப் வண்டியும் தீவைக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின், நீர்த்தாரைப் பிரயோகம் செய்யும் வாகனத்தின் மீதும் பொதுமக்கள் ஆவேசமாக தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அந்த வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, பெருமளவில், சொத்துக்களுக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.