Welcome to Jettamil

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் – சேவைகளை பெற முடியாமல் மக்கள் அந்தரிப்பு

Share

தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

27,000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைநிறுத்தப் போராட்டம்

இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (12) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 653 தபால் நிலையங்கள், 3,410 உப தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து நிர்வாக அலுவலகங்களும் முடங்கும் என்றும், சுமார் 27,000 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சேவைகளைப் பெறுவதற்காக வட்டுக்கோட்டை தபால் நிலையத்துக்கு வருகை தந்த மக்கள், தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை பார்த்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை