கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில், மாலை 6 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, முதல் ஜுன் மாதம் முதலாம் திகதி வரையில் lபரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில், மாலை 6 மணிக்கு பின்னர் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான 21, 22 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் பிற்பகல் 6 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல் படுத்தப்படமாட்டாது என்றும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூன் 1ஆம் திகதி நிறைவடைகிறது. இந்தப் பரீட்சையில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.