நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வா்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவை ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை விரைவில் பாரிய உணவுப் பஞ்சம் வரும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைச் சமாளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
அதன் ஒரு படியாக பிராந்திய நாடுகளில் இருந்து அரிசி, சீனி, மிளகாய், பருப்பு மற்றும் கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் மியன்மாரிலிருந்து ஒரு தொகுதி அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ,
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாசுமதி அரிசியை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தானுடன் பேசப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .