Welcome to Jettamil

மின்சார கட்டணம் அதிகரித்தால் போராட்டங்கள் வெடிக்கும்: சஜித் பிரேமதாச எச்சரிக்கை

Share

மின்சார கட்டணம் அதிகரித்தால் போராட்டங்கள் வெடிக்கும்: சஜித் பிரேமதாச எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமானால், அதற்கு எதிராகத் தாம் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாச இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தி ஒன்றைப் வழங்கத் தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும். இந்த மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படக் கூடாது என்றே நாம் பிரார்த்திக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம், மக்களுடன் வீதிக்கு இறங்குவோம். இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்போம்” என்று உறுதி அளித்தார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுப் பொருளாதாரத்தில் தாய்மார்களும் பெண்களும்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“துன்பம், பசி, அடக்குமுறை மற்றும் அசௌகரியத்தால் மக்களை நசுக்கி, என்றுமே மக்களை அநாதவரவான நிலையில் வைத்துக் கொள்வதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் இந்த மோசமான கொள்கைகளைத் தோற்கடிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 220 இலட்சம் மக்களினது உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை