நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை..!
இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை பரவலாக பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.