Welcome to Jettamil

கோட்டா கோகமவை பராமரிக்க குழு அமைத்தார் ரணில்

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டத் தளத்தை பராமரிப்பதற்கான குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம வளாகத்துக்கு தேவையான பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு இந்தக் குழுவைப் பணித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த பிரதமர், போராட்டத் தளங்கள் மீது அடக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை