Welcome to Jettamil

2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை ரணில் இன்று சமர்ப்பிக்கவுள்ளார்….

Share

2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) நிதியமைச்சராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். பிற்பகல் 2 மணி வரை பட்ஜெட் உரை நடைபெறும்.

அதனையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான வாக்குப்பதிவு வரும் 2ம் தேதி பிற்பகல் நடைபெற உள்ளது. இந்த விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடைவேளையின்றி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக இன்று சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 04 மாதங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் சமர்ப்பிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது பொதுநிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 735 பில்லியன்,
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை அமைச்சுக்கு 467 பில்லியன் ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 376 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி நிதி மற்றும் கடன் நிறுவனங்களுடனான அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களை வலுப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை