Welcome to Jettamil

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் நாளை பதவியேற்பு…

Share

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க நாளை (21) காலை பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவரது பதவியேற்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நாடாளுமன்றத்தின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

ஆகவே புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை