முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த சிறப்பு சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு முட்டை இறக்குமதிக்கான இந்த வரியை குறைக்கவுள்ளதாக நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகள் கொண்ட கப்பலொன்று இந்த வார இறுதியில் தீவை வந்தடையவுள்ளது.