Welcome to Jettamil

நோய்கள் பரவும் அபாயம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !

Share

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே குடிநீர் ஆதாரங்களில் அழுக்கு நீர் கலந்துள்ளதால், கொதித்தாரிய நீரை அருந்துவது மிகவும் ஏற்றது என பிரதி சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்  கலாநிதி  ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

கீரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு பாதுகாப்பாக இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.

இதேவேளை, இடைதங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இடையே சின்னம்மை, கண் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்பதால் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனையை பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை