பொதுமக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்துவரும் நிலையில் தற்போதைய அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்குவதற்கு தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிறேமதாஸ கூறியுள்ளார்.
நேற்று (09) யாழ் ஊடக அமையத்தில்இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொள்கையுடன் செயற்பட எந்த கட்சியும் முன்வரலாம். தற்போதைய ஜனாதிபதி போராட்ட அரசியலையே மேற்கொண்டு வருகிறார். நான் பெளத்தனாகவுள்ளேன் ஆனால் மத வேறுபாடு இனவேறுபாடு காட்டாமல் எல்லோரையும் இலங்கையர்களாகவே பார்க்கின்றேன்.
ஜனாதிபதியும் இதனை செய்யவேண்டும். நமது ஆட்சியில் வீட்டுத் திட்டங்களை வழங்கியிருந்தோம்.
ஆனாலும் கூட தற்போது அந்த வீட்டு திட்டங்களுக்கான நிதிகளை வழங்காமல் மக்களிடம் விளையாட்டுக்களைக் காட்டி வருகின்றது. ஆகவே நாம் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை சந்திக்கின்றோம்.
தற்போது நீக்கப்பட்டு ஆளும் தரப்பின் அமைச்சர்கள் வருகின்றனர். இவ்வாறு விடப்படும் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாற்று சக்தியாக உருவாகுவதற்கு சாத்தியமில்லை.
பாராளுமன்ற தேர்தலை 2023 நடுப்பகுதிக்குள் நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும். எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தும் ஆதரிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை.
பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.