நாடு முழுவதும் இன்று இன்று (10) முதல் திட்டமிடப்பட்ட மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று முதல் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கையினை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய எரிபொருள் வழங்கப்படாமை மற்றம் களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக, மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.