Friday, Jan 17, 2025

சஜித்தே அடுத்த ஜனாதிபதி – வெளியான அதிரடி அறிவிப்பு

By jettamil

சஜித்தே அடுத்த ஜனாதிபதி – வெளியான அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினால் வெற்றி பெற முடியாது என்றும் அதிக வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றும் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லலாம். எனினும் அவர்கள் இருவரும் இணைவது சாத்தியமற்ற விடயம் என்றும் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு