Sunday, Feb 9, 2025

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

By Jet Tamil

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு, கல்கிஸை, சிறிபுர பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவராவார்.

அவர் களுபோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) மாலை, கல்கிஸை, சிறிபால மாவத்தையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு