ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்பொழுது இரண்டாக பிளவு பட்டிருப்பதை மிகத் தெளிவாகக் காணக்கூடிய வகையில் அந்த கட்சி அரசியல் சந்திப்புகளை நடத்தி வருகிறது எனவும் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தலைவராக ஏற்றுக்கொள்வதாகவும், மேலு சிலர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக ஏற்றுக்கொள்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது நளின் பண்டார மேலும் தெரிவிக்கையில்,
மொட்டு இன்று இரண்டாக பிளவு பட்டிருப்பதை மிகத் தெளிவாகக் காணக்கூடிய வகையில் இன்று மொட்டு அரசியல் சந்திப்புகளை நடத்தி வருகிறது. சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தலைவராக ஏற்றுக்கொள்கிறார்கள் போலவே மற்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வது போலவும் தெரிகிறது.
இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்காளர் தளம் இல்லை, ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்காளர் தளம் உள்ளது.எனவே வரவிருக்கும் எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார். எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. ஒன்றிரண்டு பேர் போகலாம், யாரும் நூறு சதவிகிதம் போக மாட்டார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, சிலர் அமைச்சுப் பதவிகளுக்காக காத்திருக்கிறார்கள், அன்றிலிருந்து அலைந்து திரிந்தவர்களுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியாக மிக பலமான மாபெரும் பொதுக் கூட்டணியை உருவாக்கும் வகையில் ஐக்கிய கூட்டணியை உருவாக்கி எதிர்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்று கூறுகின்றோம். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்குகிறார். பல கட்சிகளும் சிவில் அமைப்புகளும் கூடி கலந்துரையாடி வருகின்றனர். எதிர்காலத்திற்கு பொருத்தமான பொருளாதார வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய குழு எம்மிடம் உள்ளது. சிறந்த பொருளாதார வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. அதனை இந்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு எம்மைச் சுற்றி அணிதிரள்வார்கள் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.