Welcome to Jettamil

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக்கு புதிய நிருவாகத் தெரிவு!

Share

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்றையதினம் (30), கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் தலைமையில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேசக் கிளைகளினதும் நிர்வாகிகள், மாவட்ட மாதர் முன்னணி மற்றும் வாலிபர் முன்னணி நிர்வாகிகளின் பிரசன்னத்தோடு நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், செயலாளராக திரு.வீரவாகு விஜயகுமாரும், பொருளாளராக செல்வி அன்பழகி செல்வரட்ணம் அவர்களும், துணைத்தலைவராக வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் திரு.தம்பிராஜா குருகுலராஜா அவர்களும், துணைச் செயலாளராக கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் திரு.அருணாசலம் வேழமாலிகிதன் அவர்களும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக திருமதி.கலைவாணி சிறீகாந்தன், திருமதி.குணலக்சுமி குலவீரசிங்கம், திருமதி.சிவயோகலட்சுமி சந்திரபோஸ், செல்வி.சுபிதா வேலாயுதபிள்ளை, திருமதி.உதயராணி சத்தியசீலன், திரு.பரமலிங்கம் பாஸ்கரன், திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், திரு.கறுப்பையா ஜெயக்குமார், திரு.சின்னையா தவபாலன், திரு.சுப்பிரமணியம் சுரேன் ஆகிய பத்துப்பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இத் தெரிவுக் கூட்டத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகச்; செயலாளர் திரு.சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் நெறிப்படுத்தி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை