மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாகவும், நானாட்டான் பிரதேசத்தில் புகழ் பூத்த ஆலயமாகவும் காணப்படும் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய 15 நாட்கள் கொண்ட மகோற்சவ திருவிழா தீ மிதிப்பு வைபவத்துடன் நேற்று இரவு (30) மிகச்சிறப்பாக நிறைவுற்றது.
கடந்த 10-8-2023 அன்று வவுனியா சிவஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வேட்டைத்திருவிழா, சப்பை இரதத் திருவிழா, தேர், தீர்த்தம், காவடி என்று 15 நாட்கள் மிகவும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று, நேற்றையதினம் இரவு விரதம் இருந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றியதுடன், கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.