மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை சமூக வலைத்தளங்களிலும் பொதுவிடங்களிலும் மாவீரர் தினம் நினைவுகூர்ந்தவர்களை அநுர அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் ஊடகங்களிடம் கூறியதாவது: “மரணித்த விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அநுர அரசு புதிய உயிர் கொடுக்கக்கூடாது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கு அதிக அம்சங்களை பெற்றுக்கொடுத்துவிட்டு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த நாளையும், மாவீரர் தினத்தையும் மக்கள் முன்னிலைப்படுத்துவதற்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது.”
அவர்கள் மேலும் கூறியதாவது: “இந்த அனுமதியின் மூலம் தமிழ் மக்களுக்கு அநுர அரசு நன்றிக் கடன் அளிக்கின்றது. தெற்கிலுள்ள மக்கள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக போராட வேண்டும்.”