Welcome to Jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Share

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச எய்ட்ஸ் தினம் முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (01) நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. முரளிஸ்வரன் தலைமையிலான குழு வழிகாட்டின.

ஊர்வலம் மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகிலிருந்து துவங்கி, மட்டக்களப்பு நகரச் சுற்றுவட்டம், பஸ்நிலையம், திருமலை வீதி ஊடாக மட்டக்களப்பு பொதுச்சந்தை நோக்கி சென்று, பின்னர் திருமலை வீதி வழியாக தாண்டவன்வெளி வரை சென்றது. அங்கு இருந்து பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வரை ஊர்வலம் முடிவடைந்தது.

இந்த நிகழ்வில், எச்.ஐ.வி. தொற்று மற்றும் எயிட்ஸ் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பான பாலியல் உறவு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், “எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயை தடுப்போம்” எனும் ஸ்டிக்கர்களை முக்கிய இடங்களில், பஸ்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு தாதிய பாடசாலைகள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், வைத்தியர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை