தென்னிந்திய நடிகை திருமதி ரம்பாவுடன் புகைப்படங்களை எடுத்த மாணவிகள்
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் உள்ள 10,000 மாணவர் களுக்கான தொழில்வாய்ப்புக்கான கற்கைநெறி முன்னெடுப்பதே எதிர்கால நோக்கம் என வடக்கு பல்கலைக்கழகத்தின் தலைவர் தொழிலதிபர் ப.இந்திரகுமார் தெரிவித்தார்.
வடமாகாண மாணவர்களுக்கான உயர்கல்விக்கான பல்கலைக்கழக கனவுகளை நனவாக்கும் வகையிலும் வடக்கு பல்கலைக்கழகத்திற்கான அங்குராப்பணம் (Notharn Uni) 14.12 அன்று யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இருக்கும் குறித்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு பல்கலைக் கழகத்தின் தலைவரும் தொழிலதிபருமான ப.இந்திர குமார், மற்றும் தென்னிந்திய முன்னாள் நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு வடக்கு பல்கலைக்கழகத்திற்கான அங்குராப்பணம் செய்துவைத்துள்ளனர். இதன்போது கருத்துதெரி விக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!
மேலும் தெரிவிக்கையில், கே.கே.எஸ்.உள்ள காணியில் 10,000 மாணவர்கள் தாங்கியிருந்து படிப்பதற்கான வசதி, வாய்ப்புகளுடான பல்கலைக்கழகத்தின் உருவாக்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெறுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழக சிலிப் மாலைதீவில் 21,000 மாணவர்கள் கற்கின்றனர். கண்டியில் 12,000 மாணவர்களும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் 2,000 மாணவர்களும் பயிலயுள்ளனர். அதற்காக பொறுப்பாக கல்வி கற்றால்தான் எதிர்கால த்தில் நல்லநிலைக்கு வரலாம் என தெரிவித்தார்.
இதில் வடக்கு பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிக்கான விரிபுரையாளர்கள் மற்றும் இணைபடவிதான ஆசிரியர்கள்,ஸமாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
துவிச்சக்கர வண்டியில் இருந்து மயங்கி விழுந்தவர் மரணம்!
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள 21.12 அன்று, தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்கள் உள்ளிட்ட குழுவின ரின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுவதற்காக நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.