வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் சூரசங்கார நிகழ்வு இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. எம்பெருமான் உள்வீதியூடாக வலம்வந்து பின்னர் வெளிவீதியுலா வந்து சூரனுடன் போர் புரிந்தார்.
இந்த சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்து சென்றனர்.