Welcome to Jettamil

விடுதலைப் போராட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகர் ஏரம்பு உயிரிழப்பு!

Share

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் தனது கலைப் பங்களிப்பினை வழங்கிய மாணிக்கம் ஏரம்பு அவர்கள் இன்று (18) அதிகாலைவேளை வட்டுக்கோட்டை – துணவி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

23.04.1942ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயது தொடக்கம் நடிப்பில் ஆர்வம் கொண்டு பல மேடை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டமானது வலுப்பெறுவதற்கு தன்னாலான கலைப் பங்களிப்பினை வழங்கி வந்தார். போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூத்துக்கள் உள்ளிட்ட நாடகங்களில் தனது பங்களிப்பை வழங்கி வந்ததுடன் அதுசார்ந்த கலைஞர்களுக்கு பல்வேறு வழிகாட்டல்களையும் செய்து வந்தார்.

அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றும் தனது நாடகங்களை வழங்கி இரசிகர்களை கவர்ந்து வந்த ஒருவராக திகழ்ந்தார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக தனது 91வது வயதில் இன்றையதினம் அவர் இறையடி சேர்ந்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை