அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேக நபர் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவின் அராலி தெற்கு பகுதியில், இன்று 48 வயதுடைய ஒரு சந்தேகநபர் ஐந்து லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழைப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை தொடர்ந்து, அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.