Monday, Jan 13, 2025

கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் உத்தரவு!

By kajee

கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் உத்தரவு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ளது.

இன்றிலிருந்து 14 நாட்களுக்குள், குறித்த முகாமிலிருந்து வெளியேற வேண்டும் என இராணுவத்தினர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுத்துக் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முகாமிலிருந்து இராணுவத்தை வெளியேற்றக்கூறி பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தியதாகவும், நில அளவுகளை மதிப்பீடு செய்யும் முயற்சிகளும் நடந்துள்ளன.

அனுர அரசாங்கம் பொறுப்பேற்றதற்குப் பிறகு, இந்த உத்தரவை இராணுவ தலமையகம் வெளியிட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு