Friday, Jan 17, 2025

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

By kajee

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் 7g 500mg கஞ்சா இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அராலி தெற்கு வட்டுகோட்டையை சேர்ந்தவர் எனவும், மேலதிக விசாரணையின் பின்னர் அவரை நாளை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு