யாழ்ப்பாணம் வடமராட்சி, துன்னாலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் துன்னாலை, சக்குச்சம்பா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது.
அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன்(வயது27) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.