யாழ் – மாதகல் கடல் பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் அடையாளங் காணப்படுள்ளது.
37 வயதுடைய எட்வேட் மரியசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். சடலமாக மீட்கப்பட்ட மீனவர் மாதகல், குசுமாந்துறை சேர்ந்தவர் என்றும், அவர் பயணித்த படகு கடல் பரப்பில் சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருந்து, சக மீனவர்களால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவரின் படகு மீது, இன்று அதிகாலை கடற்படையின் ரோந்து படகு மோதி, அவர் உயிரிழந்து இருக்கலாம் என சக மீனவர்ககள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், குறித்த குற்றச் சாட்டை கடற்படை மறுத்துள்ளது.
இந்த நிலையில் சடலத்தை சுற்றி வர மீனவர்கள், உறவினர்கள் சூழ்ந்து உள்ளனர்.மேலும் இந்திய ரோலர் படகு மோதியே குறித்த நபர் உயிழந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கரையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில், கடலின் அடியில் பாறை காணப்படும்,ஆகவே பாரிய படகுகள் இங்கு அண்மையாக வர முடியாது, கடற்படையே குறித்த மீனவரை மோதி கொலை செய்துள்ளது.
இன்னும் எத்தனை பேரை “நேவி” கொலை செய்ய போகுதோ தெரியவில்லை என மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.