Welcome to Jettamil

தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!

Share

யாழ் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) தற்காலிக வசிப்பிடத்தில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை – கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை