Welcome to Jettamil

தமிழ் அரசியல் தரப்புகள் தமக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் – டக்ளஸ்

Share

தமிழ் தரப்புகள் தமக்கிடையிலான பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புகள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழர் தரப்புகள் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் உட்கட்சி பூசல்களும் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பலவீனப்படுத்தியுள்ள அனுபவத்தினை மறந்துவிடக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில், கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டே கட்சிகள் இணைந்திருக்கின்றமை வெளிப்படையான விடயமென அவர் கூறியுள்ளார்.

எனினும், கடந்த காலங்களில் தலைமைக்கான போட்டிகளும் அதனால் உருவாகிய முரண்பாடுகளுமே தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்தமைக்கான பிரதான காரணமென கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போது உருவாகியுள்ள சூழலையும் தவறவிடாது பயன்படுத்திக்கொள்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து தரப்பினரும் காலத்தை வீணடிக்காது விட்டுக்கொடுப்புகளின் மூலம் தமக்கு உள்ளே இருக்கின்ற பிரச்சினைகளையும் தமக்கு இடையிலான பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை