வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே குறித்த போட்டிகள் நேற்று பிறபகல் 4:00 மணிக்கு இடம் பெற்றன.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திற்கு வெளியே என இரு பிரிவுகளாக இப் போட்டிகள் இடம் பெற்றன.
அருட்தந்தை வணக்கத்திற்குரிய ரமேஷ் அடிகளார் தலைமையில் கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தில் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டன .
இப் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார் .
இப்போட்டியில் வடமராட்சி கிழக்கிலும் , வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு வெளியேயிருந்தும் 30 பட்டங்கள் பங்கு கொண்டன.
பரிசு தொகையாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட மற்றும் பிரதேசத்திற்கு வெளியே இருந்து பங்கு பற்றியவர்களுள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 10 ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.