அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் முன்னெடுத்த தாக்குதல்களை அடுத்து, நாடு முழுவதும், பிறப்பிக்கப்பட்ட் ஊரடங்குச் சட்டம், நாளை காலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை 07 மணியுடன் ஊரடங்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாளை காலை 07 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களை அமைதி பேணும்படியும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
எனினும், ஊரடங்கை மீறி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.