Welcome to Jettamil

நாடெங்கும் இரவிரவாக பெரும் வன்முறை

Share

இலங்கையில் நேற்று நண்பகல் தொடக்கம் இடம்பெற்று வரும் வன்முறைகளில், 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 190 வரையானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அலரி மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஆளும்கட்சியினரால் தொடங்கப்பட்ட தாக்குதல் பின்னர், காலிமுகத்திடலுக்கும் பரவியது.

இந்த வன்முறைகளில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மோசமான தாக்குதல்களுக்கு இலக்காகினர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாக்க வந்த அரச ஆதரவாளர்களை விரட்டியடித்து, துரத்திப் பிடித்து, தாக்கினர்.

இதன் போதும், தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களிலும், பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

நிட்டம்புவவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும், அவரது சாரதியும் கட்டடம் ஒன்றில் மறைந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இவர்களின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேரில், ஒருவரான 27 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், ராஜபக்சவினரின் சொந்த இடமான வீரகெட்டியவில், பிரதேச சபைத் தலைவரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து பிரதேச சபைத் தலைவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இடம்பெற்று வன்முறைகளில் காயமடைந்த 190 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நாடாளுளுமன்ற உறுப்பினர் சிறு காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மாகும்புர நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே, தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை