Friday, Feb 7, 2025

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயரிழப்பு!

By kajee

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயரிழப்பு!

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – வெள்ளாங்குளம் – கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி பரஞ்சோதி (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேளை இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதன்போது இவர் டிப்பருக்கு பின்னால் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு