தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தினால், 95 ஒக்ரேன் பெற்றோலின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கொண்டு செல்வதற்கு புதிய விநியோகஸ்தர்களுக்கான பதிவை உடனடியாக ஆரம்பிக்குமாறும், கடமைக்கு வராத விநியோகஸ்தர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
ரயில்கள், அரசுக்கு சொந்தமான தாங்கிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான தாங்கிகள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை தாங்கிகள் மூலம், எரிபொருள் விநியோகம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று மாலை 4 மணியளவில் 381 தாங்கிகள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டன.
அரசுக்கு சொந்தமான 84 தாங்கிகள், 103 எரிபொருள் நிரப்பு நிலைய தாங்கிகள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத 194 வாடகை தாங்கிகள் சேவைக்குப் பயன்படுத்தப்பட்டன.
போதுமான டீசல், ஒக்ரேன் 92 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு இருப்பில் உள்ளது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.