சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் பதவியில் இருந்து, ஜடேஜா விலகியுள்ளார். இதையடுத்து அணியின் தலைவர் பதவியை மகேந்திர சிங் டோனி பொறுப்பேற்றுள்ளார்.
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஜடேஜா தலைமையில் சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில், 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
இது சென்னை அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் பதவியை விட்டு ஜடேஜா விலகியுள்ளார்,
அவர், கப்டன் பதவியை மீண்டும் டோனியிடம் ஒப்படைத்துள்ளார் ,
தனது துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்த ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது