Welcome to Jettamil

வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் முதலிடம் பெற்ற யாழ் இளைஞன் தாய்லாந்திலும் சாதனை

Share

வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் முதலிடம் பெற்ற யாழ் இளைஞன் தாய்லாந்திலும் சாதனை

இந்தவருடம் நடைபெற்ற வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் தனது அபாரமான‌ கற்பனைத்திறனைக் கொண்டு போர்தாங்கி ஆகாயவிமானத்தை வல்வை வான்‌வெளியில் பறக்கவிட்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் வல்வெட்டித்துறையை திரும்பிப் பார்க்க வைத்த விநோதன் இப்பொழுது தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக்காட்சியில் வல்வெட்டித்துறைக்கு மட்டும் பெருமை சேர்க்காது ஒட்டுமொத்த இலங்கையைர் அனைவரையும் பெருமைகொள்ளும் விதமாக இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டு அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

விநோதனுக்கு இந்த வாய்ப்பானது Bayas என்ற நிறுவனத்தின் அனுசரணை மூலமே கிடைத்துள்ளது. அவர்கள் இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்து விநோதனுக்கு இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளனர்.

கடந்த 5 நாட்களில் விநோதன் தாய்லாந்துக்கு சென்று இரண்டு பட்டங்களை கட்டி முடித்து அதனை ஒப்பணை பார்த்து பல நாட்டு மக்கள் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். அத்துடன் அங்கு பங்கு பற்றிய பல நாட்டுக் கலைஞர்களும் விநோதனின் கைவண்ணப் பட்டத்தினை பாராட்டியுள்ளனர் .

உலக வரலாற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி தாய்லாந்தில் நடைபெறும் பட்டப் காட்சியில் பங்குபற்றுவது இதுவே முதன்‌முறையாகும் .

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை